4 வயது மூத்த நடிகையை திருமணம் செய்தது ஏன்? மனம் திறந்த பசங்க பட நடிகர்
பசங்க படத்தில் நடித்த நடிகர் கிஷோர் பிரபல சீரியல் நடிகையான ப்ரீத்தி குமாரை திருமணம் செய்துள்ள நிலையில், பல கேள்விகளுக்கு ஜோடியாக பதில் அளித்துள்ளனர்.
நடிகர் கிஷோர்
கடந்த 2009ம் ஆண்டில்ல் வெளியான “பசங்க” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமாகியது. இப்படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் கிஷோர் மற்றும் மற்றொரு கதைக்கு முக்கிய கதாபாத்திரமான ஜீவா நித்தியானந்தம் கதாபாத்திரத்தில் ஸ்ரீ ராமும் நடித்திருந்தனர்.
தற்போது 13 ஆண்டுகள் கழித்து இப்படத்திற்கு நடிகர் கிஷோருக்கு தமிழ்நாடு அரசின் விருது மற்றும் தேசிய விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் கிஷோர் சீரியல் நடிகை நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது அவரை திருமணமும் செய்துள்ளார்.
நடிகை ப்ரீத்தி குமார் ஆபீஸ் சீரியலில் அறிமுகமாகிய நிலையில், பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளார்.
இவர்களின் திருமணம் முடிந்துள்ள இத்தருணத்தில் இவர்களின் வயது வித்தியாசம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வந்துள்ளது.
ஏனெனில் கிஷோரை விட ப்ரீத்தி 4 வயது மூத்தவர் என்பதாலே ரசிகர்கள் இதனை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கிஷோர் கூறுகையில், “எனக்கு கிடைத்த இந்த பெண்ணைப் போன்று ஒருவருக்கு கிடைத்திருந்தால் அந்த கேள்வியை அவர் கேட்க மாட்டார்.... அவரவர்களுக்கு ஏற்பட்டால் தான் தெரியும்.... என்றும் எங்கள் இருவருக்கும் பிடித்துவிட்டதாக பதில் கூறியுள்ளார்.