அதர்மம் தலைதூக்கும் போது அவதரிப்பார் கிருஷ்ண பகவான்!
தேவகிக்கு மகனாக பிறந்து யசோதையின் வளர்ப்பு மகனாக வளர்ந்து மகாபாரத போர் வரை துணை நின்ற கிருஷ்ணரின் வரலாறுதான் இது.
பிறப்பு
தேவகிக்கும் வாசுதேவருக்கும் 8ஆவது குழந்தையாக சிறையில் உதித்தவர் தான் இந்த கிருஷ்ணர். மருமகனால் கொல்லப்படுவான் கம்சன் என்ற அதிர்ச்சிக்குரலால் பீதியடைந்து சொந்த தங்கையையும் தங்கை கணவரையும் சிறையில் அடைத்து ஈவு-இரக்கமின்றி 7 குழந்தைகளையும் கொன்று வந்தான் கம்சன்.
ஆனால் 8ஆவது முறையாக கர்ப்பமுற்றாள் தேவகி அதே சமயம் வாசுதேவரின் நண்பன் நந்தாவின் மனைவி யசோதாவும் கர்ப்பமுற்றாள். ஆவணித் திங்கள் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு நேரத்தில் கிருஷ்ணர் அவதரித்தார். அதே சமயம் யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி, இக்குழந்தையை கோகுலத்தில் உள்ள யசோதாவின் வீட்டில் கொண்டு சென்று சேர்த்துவிடு.
அங்கு அவளுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடு என்று வாசுதேவருக்கு ஆணையிட்டார். நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டு அவரை வளர்க்க ஆரம்பித்தார்கள்.
இளம் வயதில்
சிறுவயதில் இருந்தே கிருஷ்ணர் அதிக சுட்டித்தனமாக வளர்ந்து வந்தார். குழல் ஊதிக் கொண்டு மாடு மேய்த்து வெண்ணெய்யை திருடி தின்று மாட்டிக் கொண்டு செய்யாத குறும்புத்தனத்தை எல்லாம் செய்து வந்தார். வளர வளர பிருந்தாவனத்தின் செல்லப்பிள்ளையாக மாறினார்.
இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.மேலும் இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார் எனவும் மேலும் யமுனை நதிக்கரையில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார் என்று புராணங்கள் சொல்கிறது.
இளவயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் கொண்டார்.
போரும் மரணமும்
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அருச்சுனனின் தேரோட்டியாக துணைநின்றார் இந்தப் போரில் அர்சுனணிடம் பேசிய உரையாடல் தான் பகவத் கீதையாக மாறியது.
பிற்கால வாழ்க்கையில், ஸ்ரீ கிருஷ்ணர் பல ஆண்டுகள் வாழ்ந்த துவாரகைக்கு ஓய்வு பெற்றார். ஸ்ரீ கிருஷ்ணரை மான் என்று தவறாகக் கருதி வேட்டைக்காரனால் சுடப்பட்டபோது, கணுக்கால் வழியாக அம்பு பாய்ந்து ஸ்ரீ கிருஷ்ணர் கொல்லப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.
கிருஷ்ணர் தத்துவங்கள்
- நீ விரும்பாத துன்பமே உனக்கு வரும் போது… நீ விரும்பிய இன்பம் உன்னை வந்து சேராதா…? நல்லது நினை..நல்லதே நடக்கும்
- அற்பமாய் யாரையும் ஒருபோதும் நினைக்காதீர்.. ஏனெனில் நாளை அவர்களே அற்புதங்களையும் நிகழ்த்திக் கூடும்
- எண்ணிய அனைத்தும் ஈடேறும் எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில்
- அனைவரும் அன்பிற்காக ஏங்குகிறோம் ஆனால், ஏனோ! அந்த அன்பை செலுத்த தவறிவிடுகிறோம்
- எவர் என்ன கூறினாலும் சரி.. எந்நிலை வந்தாலும் தன்னிலை மாறாதிருப்பாயின்.. அதுவே உயர்நிலையை அடையும் மார்க்கமாகும்
- எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எண்ணுவதை விட நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று நினைப்பதே வாழ்வை நலமாக்கும்
- எந்த போராட்டமும் இல்லை என்றால்.. எந்த முன்னேற்றமும் இல்லை
- மகான் போல வாழவேண்டும் என்று அவசியமில்லை! மனசாட்சிபடி வாழ்ந்தால் போதும்
- சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதீர்கள்! அதுவே உங்கள் வாழ்வில் பெறும் தவறாக மாறவும் வாய்ப்புள்ளது
- வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் பழகுவோமாயின் வேதனைகள் என்பதே நம் வாழ்வில் இருக்காது