3 மணி நேரம் பெண்ணின் காலில் சுற்றியிருந்த ராஜநாகம்... பின்பு நடந்தது என்ன?
இந்திய மாநிலம் உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவரின் காலில் 3 மணிநேரம் ராஜநாகம் ஒன்று சுற்றியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலில் சுற்றிய ராஜநாகம்
உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் தஹராவில் உள்ள தனது தாய் வீட்டில் மித்லேஷ் யாதவ் என்ற பெண் வசித்து வந்துள்ளார். காலை நேரத்தில் தனது காலில் ராஜநாகம் ஒன்று சுருண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பாம்பை விரட்டினால் தனது உயிருக்கு ஆபத்து என்று அச்சத்தில் இருந்த அப்பெண், கைகளை கூப்பி பிரார்த்தனை செய்துள்ளார். தூங்கி எழும் போது தனது கால் அசாதாரணமாக இருப்பதை உணர்ந்து பின்பு அவதானித்த பின்பே பாம்பு சுற்றியிருப்பதை அதவானித்தார்.
இதுகுறித்து அப்பெண் கூறுகையில், நான் எனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கி எழுந்த போது எனது காலில் பாம்பு சுற்றியிருப்பதைக் கண்டு, எனது தாயிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளாராம்.
சுமார் 3 மணிநேரம் இந்த போராட்டம் நடந்துள்ளது. இவர் மட்டுமின்றி இவரது குடும்பம், சுற்றியிருந்த மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் தான் பிழைக்க மாட்டேன் என்று நினைத்து, குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கனத்த இதயத்துடன் கடவுளை மட்டும் நம்பி பிரார்த்தனை செய்துள்ளாராம்.
பின்பு காவல்துறையினருக்கு தகவல் அளித்த பின்பு பாம்பு பிடிப்பவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களாலும் ஒன்று செய்ய முடியாத நிலை என்பதால் குறித்த நிமிடம் அனைவரையும் பயத்தின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பின்பு மெல்ல மெல்ல தனது பிடியை நகர்த்திய அப்பாம்பு காலிலிருந்து கீழே இறங்கியுள்ளது. பாம்பு பிடிப்பவர்கள் வீட்டிற்குள் வந்து அப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |