ராஜ நாகம் vs விஷ டார்ட் தவளை - இதில் எதற்கு வலிமை அதிகம்?
ராஜ நாகம் மற்றும் விஷ டார்ட் தவளை இரண்டுக்குமிடையில் உள்ள தனித்துவ பண்புகள் பற்றி இந்த பதிவில் ஆராயலாம்.
ராஜ நாகம் vs விஷ டார்ட் தவளை
இயற்கையில் பல விலங்குகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் சிலது ஆபத்தானவை சிலது ஆபத்தற்றவை. ஆனால் பாம்புகள் என்றால் எல்லோருக்கும் பயம் இருக்கத்தான் செய்யும்.
பாம்புகள் மிகவும் விஷம் நிறைந்தவை. இது பரவலாக கூறப்படும் ஒரு விடயம். ஆனால் பாம்புகளுக்கு சமமாகவும் பாம்பை விட அதிகமாகவும் விஷம் படைத்த அதிகமான விலங்குகள் இருக்கின்றன.
அப்படிப்பட்ட விலங்குகளில் விஷ டார்ட் தவளையும் ஒன்றாகும். எனவே ராஜ நாகத்திற்கும் விஷ டார்ட் தவளைக்கும் இருக்கும் தனித்துவ பண்புகள் வலிமை மற்றும் இன்றும் சில சுவாரஸ்ய தகவலை தெரிந்து கொள்வோம்.
அம்சம் | ராஜ நாகம் | விஷ டார்ட் தவளை |
அளவு | மிக நீளமான விஷ பாம்பு (3 முதல் 4 மீட்டர்) | சிறியது, ஒரு சில அங்குல நீளம் மட்டுமே. |
வேகம் | மணிக்கு 12.5 மைல்கள் வரை நகரும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இருக்கும். | மெதுவாக நகரும். விஷத்தை வைத்து தன்னை காப்பாற்றும். |
விஷ விநியோகம் | சக்திவாய்ந்த கடி மூலம் விஷத்தை வெளியிடுகிறது. | தோல் வழியாக விஷத்தை வெளியிடும். |
விஷ சக்தி | 20 பேரையோ அல்லது யானைகள் போன்ற பெரிய விலங்குகளையோ கொல்லக்கூடு. | தோலில் 10 வளர்ந்த ஆண்களைக் கொல்லும் அளவுக்கு நச்சு உள்ளது. |
பாதுகாப்பு பொறிமுறை | வேட்டையாடுதல் மற்றும் பாதுகாப்புக்காக கடித்து விஷத்தை செலுத்தும். | வேட்டையாடுபவர்களைத் தடுக்க தொட முடியாமல் தேலில் நச்சை கொண்டிருக்கும். |
நடத்தை மற்றும் புத்திசாலித்தனம் | பாம்புக்கு ஏற்ற புத்திசாலித்தனமாக செயல்படும். | சுறுசுறுப்பு மற்றும் உருமாற்றும் சிறப்புத்தன்மை கொண்டது. |
சாத்தியமான விளைவு | அளவு, வேகம் மற்றும் விஷ அமைப்பில் இது தான் வலிமை எடையது. இது கடித்தால் அல்லது நச்சு உட்கொண்டால் பாதிக்கப்படலாம். | இதை பாம்பு விழுங்கினால் நாகப்பாம்புக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது கொல்லும். கொடியது ஆனால் குறைவான தாக்குதல் சக்தி கொண்டது. |
அளவு, வேகம், விஷத்தின் வீரியம் மற்றும் விநியோக முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், ராஜ நாகம் பொதுவாக நேரடி மோதலில் வெற்றியாளராக இருக்கிறது.
இருப்பினும், விஷ டார்ட் தவளையின் விஷம் உட்கொண்டாலோ அல்லது நாகப்பாம்பு தவறுதலாக அதைக் கடித்து நச்சுப் பொருளை உறிஞ்சினாலோ பாமபு இறக்க நேரிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |