ராஜ நாகத்தையே மிரள வைத்த பூனை! இணையத்தில் வைரலாகும் காணொளி
படமெடுத்து சீறிய ராஜ நாகத்தின் முன் அச்சமின்றி மாஸாக நின்று அதை எதிர்கொண்ட பூனையின் தைரியமான காட்சி அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த அரிய காட்சியை பார்த்த இணையவாசிகள் பலரும் பூனையின் துணிச்சலை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
உலகின் மிகவும் விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் ராஜ நாகம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. உலகிலேயே நீளமான விஷப்பாம்பாகக் கருதப்படும் ராஜ நாகம், ஒரே முறை செலுத்தும் விஷத்தால் சுமார் 15 முதல் 20 மனிதர்களின் உயிரைப் பறிக்கக்கூடிய அளவுக்கு சக்திவாய்ந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ராஜ நாகங்கள் இயல்பாகவே மனிதர்களைத் தேடி தாக்கும் குணம் கொண்டவை அல்ல. அவை பெரும்பாலும் மனிதர்களைத் தவிர்த்து விலகிச் செல்லவே முயற்சிக்கின்றன. ஆனால், மீட்புப் பணிகள், ஆய்வுகள் அல்லது தங்களை யாரேனும் அச்சுறுத்துவதாக உணரும் சூழ்நிலைகளில் மட்டுமே தற்காப்புக்காக ஆக்ரோஷமாக மாறி தாக்கக்கூடும்.
அதேபோல், மனிதர்களோ அல்லது பிற விலங்குகளோ தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்று உணர்ந்தால்தான் ராஜ நாகங்கள் பொதுவாக சீறி தாக்க முயற்சிக்கின்றன.
இந்நிலையில், தன்னை அச்சுறுத்திய ராஜ நாகத்தின் முன் எந்தவித அச்சமும் இன்றி உறுதியாக நின்று அதை எதிர்கொண்ட பூனையின் துணிச்சலான செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று, வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |