Viral Video: விறகு கொட்டகையில் பதுங்கிய ராஜநாகம்... நடுநடுங்க வைக்கும் காட்சி
ராஜநாகம் ஒன்று வீட்டில் விறகு அடுக்கி வைக்கும் கொட்டகையில் பதுங்கியிருந்த நிலையில், அதனை லாவகமாக பிடிக்கும் காட்சி நடுநடுங்க வைத்துள்ளது.
பதுங்கியிருந்த ராஜநாகம்
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
பெரும்பாலான பாம்புகள் உணவை வேட்டையாடும் காட்சியினை அவ்வப்போது அவதானித்திருப்போம். ஆனால் கோடை காலங்களில் பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு வருகின்றது.

இவை மனிதர்களுக்கு பெரும் ஆபத்தினை விளைவிப்பதுடன், இரவு நேரங்களில் மக்கள் கவனம் இல்லாமல் பாம்பு கடிக்கும் ஆளாகிவிடுகின்றனர்.
இங்கும் வீடு ஒன்றில் விறகு அடுக்கி வைத்துள்ள கொட்டகைக்குள் ராஜநாகம் ஒன்று பதுங்கியுள்ளது. இதனை வீரர் ஒருவர் லாவகமாக பிடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் கேரளாவின் வயநாட்டில் தலப்புழா பகுதியில் அரங்கேறியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |