ராட்சத பாம்பை பிடிக்க முயன்ற நபர்: நடுங்க வைத்த காட்சி! பலவீனமானவங்க பார்க்காதீங்க
பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் ராட்சத பாம்பு ஒன்றினை பிடிக்க முயன்ற போது நொடிப்பொழுதில் பாம்பு அவரது உயிரையே எடுக்க வந்த காட்சி தீயாய் பரவி வருகின்றது.
கிங் கோப்ரா என்பது மலைபாம்பு போல மிக பெரியது கிடையாது, ஆனால் மிக கொடிய விஷம் கொண்டது மற்றும் மிகவும் சுறுசுறுப்பானது.
நீங்கள் அதைப் பிடிக்கும்போது, உங்கள் கவனம் முழுவதும் அதன் மீது இருக்க வேண்டும். சற்று கவனக்குறைவாக இருந்தாலும், அது உங்களை கடித்து விடலாம் என்பதை காட்டியுள்ளது இக்காட்சி.
அந்த வீடியோவில், கழிவறைக்குள் நுழையும் பாம்பின் வாலை பிடித்து பாம்பு பிடி வீரர் அசோக் இழுக்கையில், அது எதிர்பாராத விதமாக, திடீரென மின்னல் வேகத்தில் அவரை கொத்த சீறி படமெடுத்தது.
சுதாரித்துக்கொண்ட அவர், நூலிழையில் உயிர் தப்பினார். அந்த ராஜ நாகம் (King Cobra) சுமார் 14 அடி இருக்கும். அதை பார்க்கும் போது நமக்கே இதயத்துடிப்பு அதிகமாகின்றது.
குறித்த காட்சியை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "பாம்புகளை, குறிப்பாக கிங் கோப்ராவை பிடிக்கக் கூடாது" என்ற தலைப்புடன் பகிர்ந்த வீடியோ, சில மணிநேரங்களில் வைரலாகியது.
How not to rescue a snake. Especially if it’s a king cobra. Via @judedavid21 pic.twitter.com/yDJ5bLevQf
— Parveen Kaswan (@ParveenKaswan) September 7, 2021