மலையக அசானிக்கு பின்னணி குரல் கொடுக்கும் ஈழ கில்மிஷா..கண்டு அதிர்ந்து போன நெட்டிசன்கள்!
மலையக அசானிக்கு பின்னணி குரல் கொடுக்கும் ஈழத்து குயில் கில்மிஷாவின் செயல் இலங்கை மக்களின் ஒற்றுமையை காட்டியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சரிகமப..” நிகழ்ச்சிக்கு இலங்கையிலிருந்து இரண்டு பெண் குழந்தைகள் சென்றுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே கில்மிஷா எனும் குழந்தை யாழ்ப்பாணத்திலிருந்து சென்றுள்ளது.
பின்னர் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தன்னுடைய திறமையாலும் இலங்கைவாசிகளின் உதவியாலும் நிகழ்ச்சிக்கு சென்றவர் தான் அசானி.
அசானிக்கு பின்னணி இசை கொடுப்பது இவர் தானா?
இந்த நிலையில் இரண்டு வாரங்கள் சென்ற பின்னரும் நிகழ்ச்சி நடுவர்கள் அசானிக்கு பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் அசானி தன்னுடைய திறமையால் பாடி தமிழக மக்களையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இன்னொரு விடயம் என்னவென்றால் அசானியின் பாடலுக்கு இலங்கை கில்மிஷா தான் பின்னணி இசை கொடுத்துள்ளார்.
இந்த செயல் இலங்கை மக்களின் ஒற்றுமையை இலங்கை முழுவதும் கொண்டு சென்றுள்ளது.
அத்துடன் அசானிக்கு தேவையான வசதிகளை இந்திய மற்றும் இலங்கை மக்கள் செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |