உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை வீட்டிலேயே எப்படி கண்காணிப்பது?
உடலில் மிகவும் முக்கியமான பாகங்களில் இந்த சிறுநீரகமும் ஒன்று. தற்போது மோசமான வாழ்க்கை முறையும் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. உங்கள் சில தவறான பழக்கவழக்கங்களால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டி, தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. சிறுநீரகத்தில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தாலும், சில அறிகுறிகள் உடலில் தெளிவாகத் தெரியும்.
அவற்றை அடையாளம் காண்பதன் மூலம், சிறுநீரக ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இது எந்த அறிகுறிகள் என்பது தற்போதும் மக்களிடையே ஒரு அறியாத முறையாக உள்ளது. எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தை வீட்டில் நாம் கண்காணிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரக ஆரோக்கியம்
சிறுநீர் கழிப்பது: நீங்கள் எப்போதும் சிறுநீர் கழிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் உங்கள் சிறுநீரகம் மிகவும் நன்றாக உள்ளது.
ஆனால் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டால், சிறுநீரின் நிறம் மாறலாம் அல்லது சிறுநீரின் அளவு குறைவாக வரும். இப்படி அறிகுறி தென்பட்டால் அது சிறுநீரக பாதிப்பை காட்டுகிறது.
வீக்கம்: உடலில் எங்கும் வீக்கம் இல்லை என்றால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் சிறுநீரகம் சேதமடையும் போது, வீக்கப் பிரச்சினை வரக்கூடும்.
இது சிறுநீரக செல்கள் சேதமடைவதாலும், இரத்தம் வடிகட்டப்படாமல் இருப்பதாலும் வீக்கம் பிரச்சனை வருகிறது. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், கண்கள் மற்றும் உடலின் கீழ் பகுதி, கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும்.
தூக்கம்: சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உங்கள் தூக்கமும் பாதிக்கப்படும். தூக்கம் நன்றாக இருந்தால், உங்கள் சிறுநீரக செயல்பாடு நன்றாக இருக்கும். இது ஆரோக்கியமான சிறுநீரகங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
தசைகள் தளர்வடைகின்றன: தசைகளில் பிடிப்பு இல்லாமல் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஏனென்றால் சிறுநீரகம் சேதமடைந்தவுடன், தசை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. தசைகளில் வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன. அத்தகைய அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |