இந்த பானத்தை குடிங்க - சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருக்கும்
சிறுநீரகத்தை பாதுகாக்க தண்ணீரை விட மிகவும் சக்தி வாய்ந்த பானத்தின் வகைகள் பற்றிய விபரத்தை பதிவில் பார்க்க முடியும்.
சிறுநீரக ஆரோக்கியம்
பொதுவாக சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் நல்ல என்பது தெரிந்தது தான்.
ஆனால் தண்ணீரை வஜிடவும் மிகவும் சிறந்த ஒரு பானம் இருக்கிறது. இந்த பானங்களை குடிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை இது வடிகட்டி சுத்தம் செய்கிறது.
தாதுக்களை சமநிலைப்படுத்தும்,இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்இரத்த சிவப்பணு உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.
எனவே நம் உடலில் இத்தனை நன்மைகள் தரும் பான வகை என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
சிருநீரகத்து பானங்கள்
எலுமிச்சை நீர் - உலுமிச்சை நீர் உடலுக்கு புத்துணர்ச்சி வழங்குவதுடன் சிட்ரிக் அமிலத்தையும் தருகிறது. இதனால் நம் சிறுநீரில் உள்ள மற்ற தாதுக்களுடன் கால்சியம் பிணைப்பதைத் தடுத்து சிறுநீரக கற்களைத் தடுக்க உதவும். இதற்காக நீங்கள் காலையில் சுத்தமான தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடிக்கலாம்.
குருதிநெல்லி சாறு - குருதிநெல்லி சாறு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. குருதிநெல்லி (Cranberry) என்பது வட அமெரிக்காவில் வளரும் ஒரு சிவப்பு நிறப் பழமாகும். இது புளிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. சிறுநீர் பாதையின் உட்புறத்தில் பாக்டீரியாக்கள் ஒட்டாமல் இது தடுக்கிறது.எனவே சர்க்கரை சேர்க்கப்படாத 100% குருதிநெல்லி சாற்றை பருகி வருவது நல்லது.
மூலிகை தேநீர் - புதினா, கெமோமில், இஞ்சி, செம்பருத்தி போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படுவது தான் இந்த மூலிகை தேனீர். இது ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் மென்மையான டையூரிடிக் விளைவுகளை வழங்குவதோடு, உங்கள் சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களின் அபாயத்தை இது குறைக்க உதவுகிறது.
இதுபோன்ற சாறுகளை நாம் வழக்கமான பழக்கத்தில் எடுத்துக்கொண்டால் சிறுநீரகங்கள் உயிருள்ளவரை அப்படியே ஆரோக்கியமாக இருக்கும்.
தற்போது மக்களிடையே அதிகமாக இருக்கும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்று போன்றவற்றை இவை தடத்து நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகும்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் உடல் எடைக்கு தகுந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளும் போது இந்த பானங்களையும் செர்த்தால் 100 சதவீத ஆரோக்கியத்துடன் அப்படியே இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |