இந்த இடத்துல வலி வந்தால் உடனே சோதனை பண்ணுங்க- சிறுநீரகம் ஆபத்து வாய்ப்பு அதிகம்!
பொதுவாக மனித உடலில் உள்ள உறுப்புக்களில் சிறுநீரகங்கள் அதிகம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியவைகளில் ஒன்று.
வழக்கமாக சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகள், திரவங்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வேலையை செய்கிறது. இவ்வளவு வேலைகளை தனியாளாக நின்று செய்யும் சிறுநீரகங்கள் ஒரு சில தவறுகள் காரணமாக சேதமடைகிறது.
உதாரணமாக, புகைப்பிடித்தல், அதிகமாக மது அருந்துதல் மற்றும் உடல் பருமன் ஆகிய காரணங்களை கூறலாம். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தொற்றுகள், மரபணு நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரகங்களில் கடுமையான சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதனை ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு ஆளாக்கும். சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடையும் பொழுது சாதாரண மனிதர் ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியாது.

அந்த வகையில், சிறுநீரகங்களில் உள்ள கோளாறுகளை காட்டிக் கொடுக்கும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சிறுநீரகங்களில் கோளாறு இருக்கா?
1. சிறுநீரகங்களில் கோளாறு இருப்பவர்களுக்கு முதுகு வலி இருக்கும். அவர்கள் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஒருவருக்கு ஒரு பக்கத்தில் மாத்திரம் முதுகு வலி இருந்தால் சிறுநீரக பாதிப்பு இருப்பதை உறுதிச் செய்யலாம். முதுகு வலியுடன் குமட்டல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
2. இதயத்தில் பிரச்சனை இருந்தால் தான் நெஞ்சு வலி ஏற்படும் என்பது உண்மையல்ல. சிறுநீரகங்களில் பாதிப்பு இருந்தால் கூட நெஞ்சு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இது நோயின் மோசமான நிலையை குறிக்கிறது.

3. அடிவயிற்றில் வலி ஏற்படும் சமயத்தில் குமட்டல் இருந்தால் கூட சிறுநீரக கோளாறாக இருக்கலாம். குமட்டல் போன்ற செரிமான பிரச்சினைகள் கூட சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
4. தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற தொடர்பில்லாத அறிகுறிகள் கூட சிறுநீரக சேதத்தின் எச்சரிக்கையாக இருக்கலாம். இரத்த அழுத்தம் சரியாக இல்லாத பொழுது இது போன்ற அறிகுறிகள் தோன்றும். அக்கடி தலைவலி இருப்பவர்கள் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.

5. கால்களில் மற்றும் பாதங்களில் வலி மற்றும் வீக்கம் இருந்தால் அது கூட சிறுநீரக நோயின் பாதிப்பாக இருக்கலாம். ஒருவரது சிறுநீரகங்களில் நச்சுக்கள் நிறைந்திருந்தால் அதனை வடிகட்டி வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும். அப்போது கால்களில் வீக்கம் இருக்கும். இதனை சாதாரண பிரச்சினையாக பார்க்காது, மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |