நீண்ட நாள் கொரோனா பாதிப்பு: சிறுநீரக கோளாறு ஏற்படும்… ஆய்வின் பகீர் தகவல்
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு, சில நாட்களுக்கு பின்பு வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.
கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி, நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தவர்கள், குணமடைந்த பின் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக கொரோனாவுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்குள் சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அறிகுறிகள் இன்றி ஆறு மாதங்களுக்கு பின், பரிசோதனை மேற்கொள்ளும் போது, ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டிய அளவுக்கான தீவிர பாதிப்பு நிலைக்கு சிலர் சென்றுவிடுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என்று சிறுநீரக மாற்று மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.