இரண்டு முறை பல் துலக்கியும் வாய் துர்நாற்றம் வருதா? அப்போ இந்த நோய்கள் இருக்காம்
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் வந்தால் உடலில் சில நோய்கள் இருப்பதாக மருத்துவரால் அறிவுறுத்தப்படுகின்றது.
வாய் துர்நாற்றம்
நாம் முக்கியமான ஒரு விஷயத்தை முன்நின்று நடத்தப்போகும் நேரத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவது அசொளகரியத்தை ஏற்படுத்தகிறது. நாம் வெளியில் செல்லும்போது உடை மற்றும் வெளி அழகை எந்த அளவிற்கு கவனிக்கின்றோமோ அந்த அளவிற்கு நம் உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக உற்று கவனிக்க வேண்டும்.
வாய் மற்றும் பல் சுகாதாரத்தை தாண்டி வாய் துர்நாற்றத்திற்கு இன்னுமாரு பிரச்சனை உள்ளது. மூச்சுக்குழாய் அழற்சி, சைனசிடிஸ் மற்றும் நிமோனியா போன்ற சுவாச நோய் தொற்றுகளானது வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும்.
இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும் போது, சுவாசக் குழாயில் பாக்டீரியாக்கள் அதிகமாகி, துர்நாற்றம் வீசும் மூலக்கூறுகளை உருவாக்கி, அவை மூச்சு விடும் போது வெளியிடப்படுகின்றன.
ஆசிட் ரிஃப்ளக்ஸ், காஸ்ட்ரோஇசோஃபாஜியள் ரிஃப்ளக்ஸ் டிசீஸ் மற்றும் வயிற்றுப் புண்கள் போன்ற செரிமான கோளாறுகள் ஹலிடோசிஸ் குறைபாட்டை உருவாக வழிவகுக்கும். லிவர் உள்ளிட்ட கல்லீரல் பாதிப்புகளால் கூட வாய் துர்நாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
உடலில் நச்சுகள் குவிவதால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். கல்லீரல் சரியாக செயல்படாதபோது அவை உடலில் தேங்கலாம், இது சுவாசத்தில் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். வாய் துர்நாற்றம் பல் துலக்கியும் வருகிறது என்றால் அதை கண்டறிந்து அதற்கான மாற்று வழியை தேடுவது மிகவும் அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |