எலும்புக்கூடு மாதிரி இருக்கிறாய்! உடலை பற்றி பேசியவர்களுக்கு குஷ்பு மகள் அதிரடி
நடிகை குஷ்புவின் மகள் அவந்திக்காவை திருநங்கை என கிண்டல் செய்தவர்களுக்கு அவர் பதில் கொடுத்துள்ளார்.

குஷ்பு மகள் அனந்திக்கா
நடிகை குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
இருவரில் அனந்திக்கா அனந்திதா தயாரித்த ஆக்குபன்ஸி திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது.
இப்படி இருக்க அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த பேட்டியில் அனந்திக்கா தன்னை பற்றி உருவக்கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

உருவக்கேலி
குஷ்புவின் மகள் இருவருமான அனந்திதாவும், அவந்திகாவும் அதிக உருவ கேலியை சந்தித்தவர்கள்.
இந்நிலையில் சமீபத்தில் அனந்திதா அளித்த பேட்டி பலரிடம் பேசுபொருளாகியிருக்கிறது.
அனந்திக்கா பேட்டியில் பேசும் போது "எனக்கு 15 வயது இருக்கும்போது ரொம்பவே குண்டாக இருந்தேன். அப்போது, 'நீ அசிங்கமாக இருக்கிறாய். உன் அம்மாவை பார். எவ்வளவு அழகாக இருக்கிறார்' என சொன்னார்கள். அப்போ நான் ஒரு குழந்தை.

ஒரு குழந்தையை பார்த்து கேட்கும் கேள்வியா அது?.. சரி, இப்போ நான் ஒல்லியாக இருக்கிறேன். ஃபிட்டாக இருக்கிறேன். உடமை குறைத்த பிறகு,'ஏன் இப்போ எலும்புக்கூடு மாதிரி இருக்கிறாய்.
திருநங்கை மாதிரி இருக்கிறாய்' என சொல்கிறார்கள். உங்களுக்கு என்னதான் டா வேண்டும் நான் எப்படி இருக்கணும்னு சொல்வதற்கு நீங்கள் யார்?' என மிகவும் கோபத்துடனும் உருவக்கேலி செய்தவர்களுககு நெத்தியடி போலவும் பதில் கொடுத்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. சிலர் அனந்திக்காவை பாராட்டி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |