56 வயதில் 40 கிலோ எடை குறைத்த குஷ்பு... அவர் பின்பற்றும் ஜப்பானிய பழக்கம் இதுதான்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை குஷ்பு சுந்தர். 56 வயதான இவர், திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் பயணித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சற்று குண்டாக இருந்த குஷ்பு, தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒரு கட்டத்தில் 98 கிலோ எடையுடன் இருந்த குஷ்பு, சுமார் 5 ஆண்டுகளில் 40 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார்.
இதற்காக கடுமையான டயட்டையோ, பல மணி நேர ஜிம் பயிற்சியையோ அவர் மேற்கொள்ளவில்லை. மாறாக, தனது உணவுப் பழக்கத்திலும் அன்றாட வாழ்க்கை முறையிலும் செய்த மாற்றங்களே இந்தப் பெரிய மாற்றத்துக்குக் காரணம் என தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த எடை குறைப்பு ரகசியம் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜப்பானிய முறையில் சிறிய தட்டு
குஷ்புவின் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகித்தது ஜப்பானிய உணவுப் பழக்கம். பசி இல்லாவிட்டாலும் நேரம் பார்த்து சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்த்து, உண்மையாகப் பசி எடுக்கும் போது மட்டுமே சாப்பிடுவதாக அவர் கூறியுள்ளார்.
அதிலும், பெரிய தட்டில் உணவை நிறைய எடுத்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறிய தட்டில் குறைந்த அளவு உணவை எடுத்துச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
இதனால் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க முடிவதாகவும், வயிறு நிறைந்துவிட்டதா என்பதை எளிதாக உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிடித்த உணவுகளுக்கு ‘நோ’ சொல்லவில்லை
குஷ்புவின் எடை குறைப்பு முறையில் ஆச்சரியமான விஷயம், தனக்குப் பிடித்த உணவுகள் எதையும் அவர் முழுமையாகத் தவிர்க்கவில்லை என்பதுதான்.
மட்டன் பிரியாணி மிகவும் பிடிக்கும் என்பதால், அதை நிறுத்தாமல் சிறிய அளவு பிரியாணியுடன் ஒரு துண்டு மட்டன் மட்டுமே எடுத்துக் கொள்கிறாராம். அதேபோல் இனிப்புகள், ஐஸ்க்ரீம், சர்க்கரை கலந்த பால் டீ என தனக்குப் பிடித்தவற்றையும் அளவோடு சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, உணவை முழுமையாகத் தவிர்ப்பதைவிட அளவைக் கட்டுப்படுத்துவதிலேயே அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ!
அதிக உடல் எடையால் முழங்கால் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கிய குஷ்பு, தனது கணவருடன் இணைந்து யோகா செய்வதுடன், தினமும் சுமார் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சியும் மேற்கொள்கிறார்.
இவ்வாறு உணவின் அளவைக் கட்டுப்படுத்துதல், பசி எடுக்கும் போது மட்டும் சாப்பிடுதல், நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்ற எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம், 5 ஆண்டுகளில் சுமார் 40 கிலோ எடையைக் குறைத்து தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |