ஒல்லியாக மாறிய நடிகை குஷ்பு.... கடுப்பேத்திய ரசிகருக்கு கொடுத்த நெத்தியடி பதில்!
ஊசியேற்றிக்கொண்டதால் தான் உடல் எடையை குறைத்துள்ளார் என கமெண்ட்டு செய்த ரசிகரை டேக் செய்து நடிகை குஷ்பு கொடுத்துள்ள பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடுக்கட்டி பறந்த நடிகை தான் குஷ்பு. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆனாலும் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் புதிய சீரியலிலும் தற்போது களமிறங்கியுள்ளார்.
குண்டாக இருந்த குஷ்பு தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.
அண்மையில் இளம் நடிகையை போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு டிரெண்ட்டானார். ரசிகர்கள் பாராட்டுகளையும் பிரபலங்களின் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வந்தனர்.
ஆனால் அதில் ஒரு ரசிகர் இது மவுன்ஜாரோ ஊசியின் மாயாஜாலம். உங்களின் ரசிகர்களுக்கும் இதை சொல்லிக்கொடுங்கள். அவர்களும் ஊசி பேட்டுக்கொள்ளலாம் என கமெண்ட்டு செய்துள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்பு அந்த ரசிகரை டேக் செய்து உங்களை போன்றவர்கள் இருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது.
நீங்கள் உங்கள் முகங்களை காட்ட மாட்டீர்கள்... காரணம் உங்களுக்குள் இருக்கும் அசிங்கம் உங்களுக்கே தெரியும். உங்கள் பெற்றோரை நினைத்தால் பரிதாபமாகவுள்ளது என சரியான பதிலடி கொடுத்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
Magic of Mounjaro injection. Let your followers know that so they can get themselves injected too😏
— Sudhakar Kandasamy (@drskandasamy) April 15, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |