குஷ்பூவுக்கு 52...பிரபல நகைச்சுவை நடிகர் புகைப்படத்துடன் கூறிய வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை குஷ்பூவுக்கு பிரபல நகைச்சுவை நடிகர் சதீஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ.
இவர் இன்று தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
குஷ்பூவின் சினிமா பயணம்

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் தான் குஷ்பூ.
சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு நடிகைக்கு கோயில் கட்டினார்கள் என்றால் அது நம்ம சின்னதம்பி குஷ்புவிற்கு தான்.
இவரது சினிமாவில் இருக்கும் போது அவரை கொண்டாட ரசிகர்களே இல்லை. தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த குஷ்பு, இன்று சினிமா, அரசியல், குடும்பம் என் அனைத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அள்ளிக் கொண்டிருக்கும் நடிகை
இந்நிலையில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் குஷ்பூக்கு, சதீஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் குஷ்பூக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Happy birthday @khushsundar ka. Have a great year with lots of success ??? pic.twitter.com/HGAYkYAkcf
— Sathish (@actorsathish) September 29, 2022