கில்லாடி ஜோடிஸ்: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஜோடி யார் தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியில் க்ரிஷ், ஐஷு ஜோடிகள் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கில்லாடி ஜோடிஸ்
பிரபல ரிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ் என்ற தலைப்பில் ஒளிபரப்பாகியது.
வெறும் இரண்டு சீசன்கள் மட்டுமே ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பின்பு நடைபெறவில்லை. இந்நிலையில் கில்லாடி ஜோடிஸ் என்ற பெயரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சமூகவலைத்தளங்களைச் சேர்ந்த ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் கலந்து கொண்டு தங்களது வலிமை, மன உறுதி இவற்றினைக் கொண்டு விளையாடுகின்றனர்.
காடு, நீர், நெருப்பு, மலை என நான்கு கடினமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியினை நடிகர் சஞ்சீவ் அன்பு மற்றும் துணிச்சல் ஒன்றாக வெளிப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியினை 8 ஆண்டுகளுக்கு பின்பு சின்னத்திரைக்கு வந்துள்ள நடிகர் சஞ்சீவ் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இலங்கை, வியட்நாம், தாய்லாந்து, மாலத்தீவுகள் போன்ற நாடுகளில் நடைபெற்று வருகின்றது.

வெளியேறியது யார்?
கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளு, முள்ளு மற்றும் நீ பாதி நான் பாதி டாஸ்க் பயங்கர த்ரில்லிங்காக இருந்துள்ளது.
இந்நிலையில் இந்த வாரத்தில் க்ரிஷ், ஐஷு ஜோடிகள் வெளிறேியுள்ளனர். அதாவது ராணவ் மற்றும் சங்கவி ஜோடி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இந்த வாரம் சிறப்பாக விளையாடியவர் என்று தங்கபாண்டி மற்றும் சாந்தினி ஜோடிக்கு பரிசு கிடைத்துள்ள நிலையில், சூப்பர் விளையாட்டாளர் என நந்தினி, லோகேஷ் இருவரும் பரிசை பெற்றுள்ளனர்.