100 அடி உயரத்தில் நடந்த டாஸ்க்... உயிருக்கு போராடும் நந்தினி! திக் திக் காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியில் தற்போது புதிய டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கில்லாடி ஜோடிஸ்
பிரபல ரிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ் என்ற தலைப்பில் ஒளிபரப்பாகியது.
வெறும் இரண்டு சீசன்கள் மட்டுமே ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பின்பு நடைபெறவில்லை. இந்நிலையில் கில்லாடி ஜோடிஸ் என்ற பெயரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சமூகவலைத்தளங்களைச் சேர்ந்த ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் கலந்து கொண்டு தங்களது வலிமை, மன உறுதி இவற்றினைக் கொண்டு விளையாடுகின்றனர்.

காடு, நீர், நெருப்பு, மலை என நான்கு கடினமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போட்டியாளர்களின் அன்பு மற்றும் துணிச்சல் ஒன்றாக வெளிப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியினை நடிகர் சஞ்சீவ் தொகுத்து வழங்கி வருகின்றார். 8 ஆண்டுக்கு பின்பு இவர் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை, வியட்நாம், தாய்லாந்து, மாலத்தீவுகள் போன்ற நாடுகளில் நடைபெற்று வருகின்றது.

புதிய டாஸ்க்
தற்போது புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 100 அடி உயரத்தில் போட்டியாளர்கள் நிறுத்தப்பட்டு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் தனது பிடியை தகர்த்தினாலும் இரண்டும் பேருமே தண்ணீருக்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் நந்தினி ஜோடி தனது டாஸ்க்கை விளையாடிய போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தண்ணீர் நாசியில் ஏறியுள்ளது. இதனால் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதை நாம் ப்ரொமோ காட்சியில் பார்க்க முடிகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |