12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து உருவாக்கும் சுப அல்லது ராஜயோகங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் கிரகங்களின் அரசான திகழும் மற்றும் சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இந்நிலையில் கிரகங்களின் இளவரசனான புதன் ஏப்ரல் 30 ஆம் திகதி மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இவ்வாறு மேஷத்தில் ஆற்றல் வாய்ந்த கிரகங்களான சூரியன் மற்றும் புதன் இணைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகமானது அறிவு, தலைமைத்துவம் மற்றும் நிர்வாக வெற்றியைக் குறிக்கிறது அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகக்கு தொழில் ரீதியில் உச்சகட்ட வளர்ச்சியை கொடுக்கப்போகின்றது.
அப்படி புதாதித்ய ராஜயோகத்தின் முழு பலனையும் ஒருங்கே பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் குறித்த புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளதால் இந்த ராசியினரின் தொழில் வாழ்க்கையில் எதிர்ப்பாராத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படப்போகின்றது.
இவர்களின் முன்னைய முதலீடுகளில் இருந்து பெரிய தொகை லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. சூரிய பகவானின் ஆசியால் அதிகாரம் மிக்க பதவியில் அமருவதற்கான யோகம் உண்டாகும்.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வழிகளில் இருந்து வருமானம் பெறுவதற்கான வழிகள் திறக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
குறிப்பாக புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் பேராடி வந்தவர்களுக்கு அதற்கான வழிகள் சூரியன் ஆசியால் தானாகவே உருவாகும்.
நிதி நிலையில் அசுர வளர்ச்சி காணப்போகின்றார்கள். இந்த ராசியின் அதிபதியும் சூரிய பகவான் என்பதால் இவர்களுக்கு தொழில் ரீதியில் இரட்டிப்பு பலன்கள் உறுதி.
கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் வியாபாரம் மற்றும் தொழில் வாழ்க்கையில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகின்றார்கள்.
பணியிடத்தில் நீண்ட காலம் இருந்துவந்த பிரச்சிகைகள் நீங்கி சக ஊழியர்களுடனான உறவு மேம்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டும் மரியாதையும் கிடைக்கும்.
வேலை டுபவர்களுக்கு உயர் சம்பளத்தில் மனதுக்கு பிடித்த வேலை அமைவதற்கான பிராப்தம் உண்டாகும். மொத்தத்தில் இவர்களின் தொழில் வாழ்க்கையில் தொட்டதெல்லாம் வெற்றி தான்.