கேஜிஎப் நடிகர் சாச்சாவுக்கு இப்படி ஒரு நோயா? பணத்திற்காக தவிக்கும் அவலம்! சோகத்தில் திரையுலகினர்கள்
உலகம் முழுவதும் கன்னட படம் ஒன்று பெரிய வரவேற்பு பெற்றது என்றால் அது கேஜிஎப் படம் மட்டும் தான். இப்படம் மிகப்பெரியளவில் வசூலையும் வரவேற்பையும் பெற்றது.
இப்படத்திற்கான 3 வது பாகம் வேலையையும் நடைபெறுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஹரிஷ் ராய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் ஹரிஷ் ராய் கன்னட திரையுலகில் நடிக்க ஆரம்பித்தது சுமார் 3 தசாப்தங்களாக கன்னட திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலமான நடிகர் ஆவார்.

புற்றுநோயால் பாதிப்பு
இப்படி தன் வாழ்க்கையை நடிப்புக்காக அர்ப்பணித்த நடிகர் ஹரீஷ் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருந்து தவிப்பது திரையுலகினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், கூறும் போது தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கைக்கும் சாவுக்கும் இடையே போராடி வருவதாக தெரிவித்து இருக்கிறார்.
மேலும், உதவி தேவையை எதிர்ப்பார்க்கும் அவருக்கு மருத்துவ செலவுக்கு மாதம் 3 லட்சம் செலவாகிறதாம். இதனால் தொடர்ந்து படத்தில் நடிக்கிறாராம்.