18 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் கேது பெயர்ச்சி - இனி இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி!
ஜோதிடத்தின் அடிப்படையில் நிழல் கிரகமாகக் குறிப்பிடப்படும் கேது, மற்ற கிரகங்களைப் போல நேர்கதியில் பயணிக்காமல் எப்போதும் வக்ர நிலையில் சஞ்சரிக்கக்கூடியவர். ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கும் இவர், தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி கடக ராசிக்கு இடம்பெயரவுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரனின் ஆட்சி வீடான கடக ராசிக்குள் கேது நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கைகூடுவதுடன், வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளும் முன்னேற்றங்களும் உருவாகும் மேலும், கேதுவின் சஞ்சாரம் காரணமாக சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும் சூழலும் அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி அடுத்த 18 மாதங்கள் கேதுவால் உச்சகட்ட சாதக நன்மைகளை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்

மகர ராசியின் 7ஆம் வீட்டிற்கு கேது செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கலாம். திடீர் பணவரவு ஏற்பட்டு நிதி நிலைமை மேம்பட வாய்ப்புள்ளது.
புதிய நபர்களின் அறிமுகம் மூலம் தொழில் தொடங்கும் வாய்ப்பும், நிதி ஆதாயமும் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் உருவாகலாம்.
சிம்மம்

சிம்ம ராசியின் 2ஆம் வீட்டிற்கு கேது செல்வதால், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய நபர்களின் நட்பு பயனுள்ளதாக அமையும்.
ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும்.
கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு கேது செல்வதால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கும் கடின உழைப்புக்கும் பாராட்டுகள் கிடைக்கும்.
வேலை தேடும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையலாம். தொழிலில் முன்னேற்றமும், நிதி ஆதாயமும் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதுடன், தம்பதிகளிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.
குறிப்பான நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |