கேது நட்சத்திர பெயர்ச்சி: சோதனையில் சிக்கும் 4 ராசிகள்! பணத்தில் கவனம் தேவையாம்
கேது நட்சத்திர பெயர்ச்சியினால் சோதனையை சந்திக்கும் நான்கு ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கேது நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக குறிப்பிடப்படும் கேது கிரகம் ராசி மற்றும் நட்சத்திரத்தினை இடம்பெயரும் காலங்களில் சில ராசியினருக்கு தாக்கம் ஏற்படுகின்றது.
அந்த வகையில் கேது சிம்ம ராசியில் சஞ்சரித்து வரும்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு மகம் நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் நுழைந்துள்ளார்.
இந்த பெயர்ச்சியால் சில ராசியினருக்கு மன அழுத்தம், பண சிக்கல், குடும்பத்தில் கருத்து வேறுபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு பிரச்சனையை சந்திக்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த கேது பெயர்ச்சியால் மனதளவில் அழுத்தம் ஏற்படும். இவர்களை சுற்றி பலரும் இருந்தாலும் தனிமையாக இருப்பது போன்று உணர்வார்கள்.
பணவிடயத்திலும் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் சிக்கனாக செலவு செய்யவும். அவசரமாக யாரிடமும் பணம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
மனதை ஒருமுகப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நிம்மதியை அளிப்பதுடன், முடிந்த அளவு தனியாக இருப்பதை தவிர்த்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இருக்கவும்.

கடகம்
கடக ராசியினருக்கும் இந்த காலக்கட்டம் சவாலானதாகவே இருக்குமாம். பேச்சில் அதிக கவனம் இருப்பது அவசியம். சிறு வார்த்தை கூட தேவையற்ற கருத்து வேறுபாட்டை உருவாக்குமாம்.
பணம் தொடர்பான விடயத்தில் மற்றவர்களை முழுமையாக நம்பி முடிவெடுக்காமல் இருப்பதுடன் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லதாகும். உடல்நலனில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படலாம்.

சிம்மம்
சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் கேதுவதால் அதிகமான தாக்கம் இருப்பதுடன், தன்னம்பிக்கை குறைந்த உணர்வும் தோன்றும். முக்கிய முடிவை எடுக்கும் போது தயக்கம் ஏற்படலாம்.
வேலையில் மேல் அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படாமல் கவனம் பேசுவது சிறந்தது. தலைவலி மற்றும் தூக்கமில்லாமல் பாதிப்பும் ஏற்படும். மன அழுத்தத்தினைக் குறைப்பதற்கு தியானம், நடைபயிற்சி இவற்றினை மேற்கொள்ளவும்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் பண விடயத்தில் கவனம் இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் பணத்தை திட்டமிட்டு பயன்படுத்துவது சிறந்தது.
பயணம் மேற்கொள்ளும்போது அவசரம் இல்லாமல் செல்லவும். குடும்பத்தினரிடம் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நலத்தில் அக்கறையாக இருக்கவும். உடல்நலம் மற்றும் பொருளாதார இவற்றில் அலட்சியம் இல்லாமல் எச்சரிக்கையாக இருக்கவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |