சத்துக்கள் நிறைந்த லஸ்ஸி! பீமனுக்கு கண்ணன் கொடுத்த பானமாம்
சத்துக்கள் நிறைந்த லஸ்ஸி இன்று பலருக்கும் பிடித்தமான பானமாக மாறி வருகின்றது. ஆனால் இதற்கு பின்னே புராண கதை உள்ளது நம்மில் பலருக்கு தெரியவில்லை.
பீமனுக்கு கண்ணன் கொடுத்த பானம் லஸ்ஸி
ஆயுர்வேதத்தில் இதற்கு ரஸாலா என்று பெயர். இதைப் பற்றிய குறிப்பு ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, புராணங்களிலும் இடம்பெற்றிருக்கிறது.
மகாபாரத காலத்திலேயே இது பயன்படுத்தப்பட்டதாக பழமையான ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன.
கண்ணன், பீமனுக்கு இந்த பானத்தை தயாரித்துக் கொடுத்திருக்கிறாராம். இதற்கு பீம சேன சீகாரணி என்று பெயராம்.
சத்ரபதி சிவாஜி காலத்தில் வாழ்ந்த ஆயுர்வேத அறிஞர் ரகு நாத சூரி, தான் எழுதிய போஜன குதூகலம் என்ற ஆயுர்வேத நூலில் இதன் மகத்துவத்தையும் பல வகையான லஸ்ஸி முறைகளைப் பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளாராம்.
கேசர் லஸ்ஸியை குட்டீஸ் விரும்பி சுவைப்பார்கள். இந்த லஸ்ஸியில் புரதச்சத்து, கால்சியமும் நிறைந்துள்ளது. இன்று இந்த லஸ்ஸி செய்முறையை பார்க்கலாம்.
பாலாவை வாழ்த்த நிரூப் கூறிய ஒற்றை வார்த்தை! பொறாமையின் உச்சமா? வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
தேவையான பொருட்கள் :
கெட்டித் தயிர் - ஒரு கப்,
குங்குமப்பூ - சிறிதளவு,
காய்ச்சி ஆற வைத்த பால் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - தேவையான அளவு,
பிஸ்தா, பாதாம் துருவல் - தலா 2 டீஸ்பூன்.
செய்முறை :
பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
தயிருடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.
மேலே பாதாம், பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.