வீட்டிலேயே கெரட்டின் சிகிச்சை செய்வது எப்படி? இந்த மந்திர விதைகள் போதும்
பார்லர் சென்று விலை கொடுத்து கெரட்டின் சிகிச்சை செய்து கொள்ளாமல் வீட்டிலேயே இரண்டு விதைகள் வைத்து கெரட்டின் சிகிச்சை செய்முறை பார்க்கலாம்.
கெரட்டின் சிகிச்சை
கெரட்டின் சிகிச்சை (Keratin Treatment) என்பது முடியை நேராக்கவும், பளபளப்பாக்கவும், கட்டுப்படுத்தக்கூடியதாகவும் மாற்றும் ஒரு அழகுசாதன முறையாகும்.
இது வெப்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு தற்காலிக சிகிச்சையாகும், இது முடியில் உள்ள கெரட்டின் புரதத்தை மீண்டும் நிரப்பி, முடியின் அமைப்பை மேம்படுத்துகிறது.
அதுவும் தற்போது இதை பார்லர் சென்று செய்து கொள்ள அதிக பணம் செலவாகின்றது. எனவே இந்த பதிவில் குறிப்பிட்ட முறையை செய்து பார்த்தால் பணமும் மிச்சமாகும் கெரட்டின் சிகிச்சையும் செய்யலாம்.
செய்யும் முறை
கடைகளில் மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய ஆளி விதைகளை வாங்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை உங்கள் தலைமுடிக்கு ஏற்ற அளிவில் நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும். இது ஒரு 10 நிமிடங்கள் கொதித்து வந்ததும் அடுப்பை விட்டு இறக்கி விதை வேறாக்கி வடிகட்டி எடுக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதை நன்றாக முள் கரண்டி கொண்டு நசுக்க வேண்டும். பின்னர் நசுக்கிய அந்த வாழைப்பழ கலவையில் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும்.
இதில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ஆளி விதையின் ஜெல்லை எடுத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இன்னுமொரு பாத்திரத்தில் அரை வாழைப்பழம் மற்றும் ஒரு முட்டை ஒலிவ் ஒயில் சோள மா மற்றும் தயிர் சேர்த்து மிக்ஸி ஒன்றில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு கலவையையும் வாரத்தில் இரண்டு தடவை பயன்படுத்தி வந்தால் உங்களுடைய தலைமுடி நேராகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் வரும். அதாவது கெரட்டின் சிகிச்சை செய்தால் முடி எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
