காரில் சாய்ந்த 6 வயது சிறுவன்! எட்டி உதைத்த இளைஞரின் பகீர் காட்சி
கேரளாவில் காரில் சாய்ந்த 6 வயது சிறுவனை, கார் உரிமையாளரான இளைஞர் ஒருவர் எட்டி உதைத்துள்ள காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரில் சாய்ந்த சிறுவன்
கேரளா மாநிலம் தலசேரி பகுதியில் நேற்று மாலை, சாலை ஓரத்தில் நின்ற காரில் 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றதால் அந்த காரின் உரிமையாளரான இளைஞர் ஒருவர் அந்த சிறுவனை எட்டி உதைத்துள்ளார்.
குறித்த சிறுவனை தள்ளிப்போக கூறாமல், 'சாய்ந்து நிற்க வேறு இடமில்லையா' என்று கூறி எட்டி உதைத்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பின்பு இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அந்த காரின் உரிமையாளர் பெயர் ஷிஷாத் என்பதும், அவர் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் தாக்கப்பட்ட சிறுவன் ராஜஸ்தானைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியின் 6 வயது மகன் கணேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.
God's Own County has become the Devil's Own Land under the @pinarayivijayan regime. A six-year-old Rajasthani boy was kicked and manhandled for leaning on a car. This inhuman incident happend in Thalassery, Kannur.@PrakashJavdekar @AgrawalRMD @BJP4India pic.twitter.com/R0m9nd1sFQ
— K Surendran (@surendranbjp) November 4, 2022