ஒரே ஒரு லொட்டரி சீட்டால் கோடியில் புரளும் கேரள பெண்! எவ்வளவு தெரியுமா?
கேரள லாட்டரி ஆனது பலரையும் கோடீஸ்வரர்களாக மாற்றி இருக்கிறது. சாதரணமான ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்படி வரும் எந்த நேரத்தில் வரும் என்றே சொல்ல முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் பெண் ஒருவருக்கு அடித்துள்ளது.
லொட்டரி குலுக்கலில், கோடிக்கணக்கான ரூபாய் பரிசுத் தொகையாக கிடைத்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லீனா ஜலால்.
இவர் அபுதாபியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில், மனித வள வல்லுனராக அவர் பணிபுரிந்து வருகிறார். வார வாரம் நடைபெறும் 'Big Ticket' என்னும் லொட்டரி குலுக்கலில், லொட்டரி டிக்கெட் ஒன்றை லீனா வாங்கியுள்ளார்.
அதேப்போல் கடந்த 3-ம் தேதி இவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டில் பரிசு விழுந்துள்ளது. அதுவும் 22 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் 44 கோடியே 75 லட்சம்) பரிசு தொகை விழுந்துள்ள நிலையில், மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயுள்ளார் லீனா ஜலால்.
மேலும், தனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை 10 பேருடன் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள லீனா, பரிசுத் தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அபு தாபியில் மிகப் பெரிய பரிசுத் தொகையை வென்ற லீனா ஜலாலுக்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.