கேரள பாணியில் நெத்திலி மீன் குழம்பு - இதை சேர்த்தால் சுவை அள்ளும்
மீன் குழம்பு என்றால் யாரக்கு தான் பிடிக்காது. இந்த நெத்திலி மீன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளை பலப்படுத்தி, உடலில் கொழுப்பைக் குறைத்து, புற்றுநோய் மற்றும் தைராய்டு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
இதில் உள்ள செலினியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
இதன் சுவை எந்த உணவிற்கும் பொருந்தும். அதிலும் சூடான சாதத்தில் இதை போட்டு சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- அரை கிலோநெத்திலிமீன்
- 2பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன்மிளகாய் பொடி
- கொஞ்சம்இஞ்சிதட்டியது
- நெல்லிக்காய்அளவுகொடம்புளிorசாதா புளி
- அரைஸ்பூன்மஞ்சள் பொடி
- தேவைக்கு உப்பு
அரைக்க
- 1 கப்தேங்காய்துருவல்
- 6சின்னவெங்காயம்
தாளிக்க
- 4 ஸ்பூன்தேங்காய்எண்ணெய்
- அரைஸ்பூன்கடுகு
- 10 கொத்துகருவேப்பிலை
செய்யும் முறை
முதலில் நெத்திலி மீன்களை நன்கு கழுவி சுத்தம் பண்ணிக்கொள்ளவும். பின்னர் ஒரு மண் சட்டியில் இஞ்சி மிளகாய்பொடி,போட்டு புளிகரைத்து ஊற்றவும்.
பின் தேங்காய்,வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கையால் நன்கு கரைத்து விடவும். அதிலேயே உப்பு சேர்க்கவும். பின்னர் பச்சைமிளகாய் சேர்க்கவும்.
இதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அது நன்கு கொதிக்கும் போது மீன்களைக்குழம்பில் போடவும். மீன்கள் உடனே வெந்து விடும். பின் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். மண்சட்டி சூட்டிலேயே மீன் வெந்துவிடும்.
பின்வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும். பின் மீன் குழம்பில்தாளித்ததை ஊற்றவும். இப்போது நெத்திலி மீன்குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |