நேருக்கு நேர் கார் மீது பஸ் மோதி பயங்கர விபத்து... பதற வைக்கும் வீடியோ வைரல்
கேரளாவில் நேருக்கு நேராக கார் மீது பஸ் மோதி விபத்து நடந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார் மீது பஸ் மோதி பயங்கர விபத்து
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், கிழவல்லூர் அருகே கார் மீது கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது, இந்த விபத்தில் பஸ் தேவாலயத்தின் சுவர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் தேவாலயத்தின் பெரிய சுவர் இடிந்து பஸ் மீது விழுந்தது.
இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#WATCH | Kerala: A Kerala State Road Transport Corporation bus met with an accident after colliding with a car near Kizhavallor in Pathanamthitta district. Thereafter, the bus rammed into the wall of a church. Injured passengers were rushed to hospital. pic.twitter.com/SiFjOvDLsR
— ANI (@ANI) March 11, 2023