2023-ல் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்றா? யாமறியாத சில அப்பேட்கள்!
பொதுவாக மன அழுத்தமாக இருக்கும் நேரங்களில் வெளி இடங்களுக்கு சுற்றுலா சென்று ஓய்வாக இருந்து விட்டு வர வேண்டும் என ஆசை கொள்வோம்.
அந்த வகையில் அதிகமான சுற்றுலா பயணிகள் தெரிவும் செய்யும் 52 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.
இந்தியா காலநிலைகளுக்கேற்ப அங்கு வாழும் மக்கள் அவர்களின் கலாச்சாரங்களும் மாற்றமடைகின்றன.
சுற்றுலா பயணிகள் அவர்களின் பொழுதை இனிமையாக கழிக்க வேண்டும் என்றால் இயற்கையுடன் கூடி ஒரு வகை நிம்மதி தேவைப்படுகின்றது.
இது போன்ற இந்தியாவில் சுற்றுலா பயணிகளுக்கு அப்படி என்ன நிம்மதி கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கேரளா
இந்தியாவில் இருக்கும் அழகிய இடங்களில் கேரளாவும் ஒன்று. இந்த இடம் சுற்றுலா பயணிகள் அதிகமாக விரும்பி பார்க்கும் இடங்களில் ஒன்றாக இருக்கின்றது.
இங்கு கடற்கரைகள், காயல்கள் (backwater lagoons) உணவு வகைகள் உள்ளிட்டவற்றோடு செழுமையான கலாச்சார மரபுகளுக்கு பெயர் பெற்ற இடமாக இருக்கின்றது.
இதற்காக சுற்றுலாத்தலங்களின் கணிப்பின் பிரகாரம் கேரளா 13 ஆவது இடத்தை பிடிக்கின்றது. அத்துடன் கேரளாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுப்புற வாழ்க்கையை அனுபவிக்கவும் முடியும்.
சாதாரண இந்திய மக்களை விட கேரளாவில் வாழும் மக்கள் வித்தியாசமான கிராம வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இயற்கையாக இருக்கும் தாவரங்களை வைத்து வித்தியாசமான மருத்துகள் இங்கு தயாரிக்கப்படுகின்றது.
யாமறியாத சில குறிப்புகள்
இயற்கை செழுமை மிகுந்த வரிசையில் லண்டன், ஜப்பானின் மோரியோகா, ஸ்காட்லாந்தின் கில்மார்டின் க்ளென், கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸ், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவு, நார்வேயின் ட்ரோம்சோ மற்றும் அல்பேனியாவின் வ்ஜோசா நதி ஆகிய இடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கேரளாவும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இயற்கையான வீடுகள், நதிகள், மலைகள் இங்கு பரவலாக காணப்படுகின்றது. இதனால் புதிதாக திருமணமான ஜோடிகள் தங்களின் வாழ்க்கை துவங்குவதற்காக இங்கு அதிகமாக வருகை தருகிறார்கள்.
கேரளாவாசிகள் அவர்களின் ஆடை, வழிபாடு, வீடு, மொழி என அனைத்திலும் புது விதமான வித்தியாசத்தை காட்டுவார்கள்.
வரண்ட பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் குளிர்ச்சி பொருந்திய இந்த இடங்களில் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார்கள்.
அத்துடன் மாந்திரியங்களுக்கு கேரளா பெயர் போன இடம் என பலரும் கூறுவார்கள். இறை வழிபாடு இங்கு கடுமையானதாக இருக்கும். இதனால் மாந்திரம் செய்பவர்களும் இங்கு அதிகமாக வருகிறார்கள்.
சுற்றுலா என்றால் மனதையும் உடலையும் திடப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
அந்த வகையில் நாம் தற்போது தெரிந்து கொண்ட சில விடயங்களை வைத்து கேரளாவிற்கு வந்து சுற்றி பார்த்து விடுவோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |