கேரளா பாணியில் தக்காளி தொக்கு! சுவை மாறாமல் செய்யும் ரெசிபி இதோ
பெரும்பாலும் நாம் உண்ணும் உணவில் இட்லி தோசை இடம்பெறும். இதற்கு சாம்பார் சட்னி என பல வகையாக உண்பார்கள். பலரும் தக்காளியில் சட்னி செய்து சாப்பிடுவார்கள்.
இது பல இடங்களில் பல வகையாக செய்வார்கள். தக்காளியில் பல சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த தக்காளியை வைத்து கெரளா பாணியில் எப்படி தொக்கு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- சோம்பு - அரை ஸ்பூன்
- பூண்டு - 10 பல்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- நறுக்கிய வெங்காயம் - 1 கப்
- நறுக்கிய தக்காளி - 2 கப்
- கீறிய பச்சை மிளகாய் - 4
- மஞ்சள் - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- சர்க்கரை - அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்தது வரும் போது அதில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்.
இதை கொஞ்ச நேரத்திற்கு வறுக்கவும். பூண்டு பொன்னிறமாக தாறிய பின்னர் வெங்காயம், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
இதை ஒரு ஐந்து நிமிடங்கள் வதக்கி நீராவியில் மூடி வைக்கவும். இப்போது நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அதில் மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.
இந்த கலவையை நை்து நிமிடங்களுக்கு வதக்கிக்கொண்டே இருக்க வேண்டம். இப்படி வதக்கும் போது தக்காளியின் நீர்ச்சாற்றை முழுமையாக எடுக்க வேண்டும்.
இப்படி தக்காளி நன்றாக வேகியதும் அதில் காரதான மசாலா சேர்க்கவும். தக்காளி கூழ் பதத்திற்கு வந்தவுடன் நீண்ட நேரம் வேக வைக்க கூடாது.
கடைசியாக இதில் கொத்தமல்லி இலைகளை மேலால் போட்டு எடுத்தால் கெரளா தக்காளி தொக்கு தயார். இந்த தக்காளி தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |