கேரளா பாணியில் அறுசுவை நிறைந்த தக்காளி தொக்கு... எப்படி செய்வது?
பொதுவாகவே நகர் புறங்களில் பெரும்பாலும் ஆண்கள் பெண்கள் இருவருமே தொழில் புரிபவர்களாக இருக்கின்றார்கள்.
அதனால் விரும்பிய உணவுகளை சுவையாக செய்து சாப்பிடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.
இப்படி தொழில் நிமிர்த்தம் தினசரி சமைக்க முடியாதவர்கள் மூன்று மாதங்கள் வரையில் வைத்து சாப்பிடக்க கூடிய தக்காளி தொக்கை எளிமையாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - அரை தே.கரண்டி
சோம்பு - அரை தே.கரண்டி
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
நறுக்கிய தக்காளி - 2 கப்
கீறிய பச்சை மிளகாய் - 4
மஞ்சள் - 1 தே.கரண்டி
மிளகாய்த்தூள் - 1தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயம், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை மூடி சிறிது நேரம் வெங்காயத்தை வேகவிட்டு ,நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்னர் மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி நன்றாக வெந்து சாறை முழுமையாக வெளியேற்றும் வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வெந்ததும் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்க்த்து தக்காளி கூழ் பதத்திற்கு வரும் வரையில் வேகவிட வேண்டும்.
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் தக்காளி தொக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |