பாரம்பரிய முறையில் கேரளா ஸ்டைல் சக்க கூட்டு கறி செய்ய தெரியுமா?
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று.
இந்த பழத்தை பெரும்பாலும் சமைப்பது கடினம் என பலரும் நினைத்து சமைக்கமாட்டார்கள்.
ஆனால் பலாப்பழத்தால் செய்யப்படும் உணவுகள் செய்வதற்கு இலகுவானதாகவும் எளிமையானதாகவும் இருக்கும்.
அந்த வகையில் பலாப்பழத்தை வைத்து கேரளா ஸ்டைல் சக்க கூட்டு கறி எப்படி செய்வது என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சக்க கூட்டு கறி
தேவையான பொருட்கள்
- பலாப்பழம் (சக்கை/பழப்பழம்) - 1 கோப்பை
- காரமணி - 2 டீஸ்பூன்.
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் - 3/4 கப்
- சீரகம் - 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 1
- தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு விதைகள் - 1 தேக்கரண்டி
- உளுந்து பருப்பு (உளுத்தம் பருப்பு) - 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 2
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை
முதலில் காரமணியை சுமார் 10 - 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். பின்னர் பலாப்பழத்தை எடுத்து சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். 1/4 கப் அளவு தண்ணீரை கொண்டு காரமணியை 3 விசில் வரை வேக வைக்கவும்.
இதனை தொடர்ந்து கடாயில் வெட்டிய பலாப்பழம், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். கடாயை மூடி சுமார் 6 - 8 நிமிடங்கள் வேக விடவும். அதனுடன் வேக வைத்து எடுத்த காரமணியை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
தேங்காய், சிவப்பு மிளகாய் மற்றும் சீரகத்தை ஒரு பேஸ்ட்டாக அரைத்து வெந்து கொண்டிருக்கும் பலாப்பழத்தில் ஊற்றவும். மூடிப்போட்டு 4 நிமிடங்கள் வரை இளங்கொதியலில் விடவும்.
இதற்கடித்தபடியாக ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பை கறியில் ஊற்றி கிளறினால் சுவையான கேரளா ஸ்டைல் சக்க கூட்டு கறி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |