காரமும் இனிப்பும் கலந்த கேரளா புளி இஞ்சி கறி - இந்த இரண்டு பொருள் போதும்
கேரளாவில் இஞ்சி புளி கறி ஓணம் பண்டிகையின்போது பிரபலமாக செய்வார்கள். இது இஞ்சி, புளி முக்கிய மூலப்பொருளாகக் கொண்ட ஒரு காரமான மற்றும் இனிப்பு கறி.
வீட்டில் பாரம்பரியமாகவும் ஒரே மாதிரியாகவும் எவ்வளவு நாட்களுக்கு இப்படியே சாப்பிட்டுவது. வித்தியாசமாகவும் எதாவது சாப்பிடலாம் தானே. பொதுவாக கேரள மக்கள் வித்தியாசமான உணவு செய்து ருசிப்பதில் வல்லவர்கள்.
அவர்கள் என்ன உணவு செய்தாலும் அதில் இருக்கும் மணமும் சுவையும் வித்தியாச உணர்வை கொடுக்கும். இந்த பதிவில் ஒரு வித்தியாசமான இஞ்சி புளி கறியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செய்யுமுறை
இதற்கு புளியை முதலில் வெந்நீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்களுக்கு அவசரமாக வேண்டும் என்றால் நீங்கள் குக்கரில் வைத்து ஒரு விசிலுக்கு அவித்து எடுக்கலாம்.
பின்னர் அந்த புளியை கொஞ்சம் தண்ணீர் விட்டு பிளித்து புளியை பிரித்து எடுக்க வேண்டும். (மொத்தம் 2 கப் தோராயமாக) பின்னர் இஞ்சியை உரித்து தோல் நீக்கி எடுக்கவும்.
படத்தில் இந்த இஞ்சியை வெட்டும் முறை காட்டியுள்ளேன் பாருங்கள். இதை பார்த்து அதை சிறு துணிக்கைகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
பின்னர் கறிக்கு தேவையான எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, முதலில் கடுகு தூவி, பின்னர் மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.
குறைந்த வெப்பத்தில் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை வறுக்கவும். புளி சாறு சேர்க்கவும். உள்ளே மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து கொதிக்க விட்டு தீயை மிதமான அளவில் வைக்கவும்.
இது கொதித்து பாதி அளவிற்கு வர வேண்டும் .பிறகு தேவையான உப்பு சேர்க்கவும். அதன் பிறகு, வெல்லத்தைச் சேர்க்கவும்.
கலப்படம் இல்லாத வெல்லம் சேர்க்கவும். அப்படி கலப்படம் இருந்தால் அதை சிறிது தண்ணீரில் கரைத்து, இந்த கட்டத்தில் சேர்க்க வடிகட்டி சூடாக்கவும். பின்னர் வறுத்த வெந்தயப் பொடியைச் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும். இஞ்சி புளி கெட்டியாகவும், கறி பார்க்க மேற்பரப்பில் பளபளப்பாக மாறியதும், அடுப்பை அணைக்கவும். இந்த கறி குளிர்ந்ததும் சிறிது கெட்டியாகி தளர்வான ஜாம் போல மாறும். இதன் பின்னர் நீங்கள் உண்டு மகிழலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |