Kanava Fish Roast: கேரளா ஸ்டைல் கனவா மீன் ரோஸ்ட் செய்வது எப்படி?
கேரளா ஸ்டைல் அரைத்த மசாலாவில் தேங்காய் சேர்த்து கனவா மீன் ரோஸ்ட் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
கேரளா உணவில் மிகவும் முக்கிய இடம்பிடித்துள்ளது மீன் ரோஸ்ட் ஆகும். அதிலும் கனவா மீன் ரோஸ்ட் மிகவும் பிரபலம் என்று தான் கூற வேண்டும்.
தேவையான பொருட்கள்
கனவா மீன் (Squid / காளாமறி) – 500 கிராம் (வட்ட துண்டுகளாக வெட்டியது)
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மசாலா தயாரிக்க
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி எண்ணெய் (அல்லது) தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்)
வெங்காயம் – 2 (பெரியதாக நறுக்கியது)
தக்காளி – 2 (மென்மையாக அரைத்து வைத்தது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – அலங்காரத்திற்காக
மசாலா தூள் சேர்க்க
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் / கேரளா கிரேவி மசாலா – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
வினிகர் (அல்லது) கசுந்தி – 1 டீஸ்பூன் (ருசிக்கேற்ப)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
தண்ணீரில் கனவா மீனை நன்றாக கழுவி, மஞ்சள் தூள், உப்பு எலுமிச்சை சாறு கலந்து 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இவை மீனின் கடினத்தன்மை குறைத்து மென்மையாக வைக்கும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கியதும், தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகு தூள், கொத்தமல்லித் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கிய பின்பு, ஊற வைத்த கனவா மீனை சேர்த்து 7 அல்லது 8 நிமிடம் வேக வைத்து, அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.
சுவையான கனவா மீன் ரோஸ்ட்டை பரோட்டா, ஆப்பம், இடியாப்பம், சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |