கேரளா ஸ்டைலில் தேங்காய் மீன் குழம்பு... வெறும் 10 நிமிடம் போதுமாம்
மீன் குழம்பு பாரம்பரிய கேரளா ஸ்டைலில் செய்வதைக் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களின் பட்டியலில் மீன் முதலிடத்தில் இருந்து வருகின்றது. பொதுவாக கேரளாவில் வைக்கும் சமையல் மிகவும் ருசியாகவே இருக்கும்.
அந்த வகையில் கேரளா தேங்காய் மீன் குழம்பு, மசாலாக்களின் அட்டகாசமான மணத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மீன் - அரை கிலோ (எந்த வகையாக இருந்தாலும்)
தேங்காய் - ஒரு கப்
புளி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - ஒரு கப்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை
புளியை ஊற வைத்து தனியாக வைக்கவும். மீனை நன்றாக சுத்தம் செய்து உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு இவற்றினை கலந்து வைக்கவும்.
சின்ன வெங்காயம், தேங்காய், சீரகம், ஊற வைத்த புளி இவற்றினை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாய் ஒன்றில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இந்த கலவை கொதித்த பின்பு, தீயை குறைத்து வைத்து, ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஒரு 10 நிமிடம் கொதிக்க வைத்து மீன் வெந்ததும் இறுதியாக சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பினை இறக்கவும்.

கடைசியாக வாசனைக்கு கறிவேப்பிலையை நசுக்கி மேலே தூவிவிடவும். இறுதியாக எண்ணெய் கடுகு உளுந்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து ஊற்றவும்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |