கேரளா பாணியில் பூரிக்கு பக்காவாக பொருந்தும் சிக்கன் கிரேவி... எப்படி செய்வது?
பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், மற்ற வேலைகளில் இருந்து விடுபட்டு நாவூக்கு ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள்.
அந்தவகையில் இன்று வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரும் விரும்பும் வண்ணம் சற்று வித்தியாசமாக கேரளா பாணியில் எவ்வாறு சிக்கன் கிரேவி தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைப்பதற்கு
மிளகு - 1தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
அன்னாசிப்பூ - 1
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பட்டை - 3 துண்டு
துருவிய தேங்காய் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 4 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
சின்ன வெங்காயம் - 3
தண்ணீர் - சிறிது தாளிப்பதற்கு
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் - 2
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
சிக்கன் - 1/2 கிலோ
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கழுவி, தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சோம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, 1/2 கப் துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காய் பொன்னிறமாகும் வரையில் வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிறிது உப்பு மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில், நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி, அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கிளறி நன்கு கொதிக்கவிட வேண்டும்.
அதனையடுத்து அதில், கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறிவிட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் 20-25 நிமிடங்கள் சிக்கனை வேகவிட வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் அருமையாக சுவையில், கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |