மாஸ் சீனை வைத்து அவசர எண்ணை விளம்பரம் செய்த போலீசார்
கேரளாவில் அவசர உதவி எண்ணை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அங்குள்ள போலீசார் நடிகர் விஜயின் படங்களை வைத்து வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளனர்.
கேரளாவில் விஜய்க்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது நாம் அறிந்த விஷயமே.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ள எண்ணிய கேரள காவல்துறை விஜய் பட காட்சிகளை எடிட் செய்து விளம்பரம் உருவாக்கியுள்ளனர்.
If you or anyone you know is stuck in an emergency, dial 112 and we will be there for you!#keralapolice #Dial112 #ERSS #EmergencyHelpline pic.twitter.com/EwZntZeoqT
— Kerala Police (@TheKeralaPolice) February 24, 2022
அந்த காணொளியில் போக்கிரி படத்தில் அசின் பிரச்சனையில் சிக்கியுள்ள போது அவரது தம்பி விஜய்க்கு போன் செய்யும் காட்சியில் 112 என்னும் எண்ணை டயல் செய்வது போன்று எடிட் செய்துள்ளனர்.
பின்னர் கால் செய்த சில வினாடிகளில் தெறி படத்தில் பள்ளிக்கூடம் முன்பு விஜய் போலீஸ் யூனிஃபாமில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் காட்சியை வைத்தது 112 என்னும் அவசர எண்ணை விளம்பர படுத்தியுள்ளனர்.