இளைஞர் ஒருவரின் இ-பாஸை கண்டு அதிர்ந்துபோன போலீசார்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனால் பாதிப்பை குறைக்க அரசாங்கம் போராடி வரும் நிலையில், மக்கள் அச்சமின்றி சுற்றி திரிவதையும் காணமுடிகிறது.
இதனால், நிலைமையைச் சமாளிப்பதற்கும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
மேலும், தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில் அனாவசியமாக மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற கூட்டத்தையும், பயணத்தையும் தவிர்க்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அனாவசியமாக வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், மாநிலத்திற்குள் பயணங்களுக்கு தடை அறிவித்த மாநிலங்களில் அவசர தேவைக்கு வெளியே செல்ல இ-பாஸ் பெறுமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தவிர்க்க முடியாத காரணங்களுடனும், சில மூடத்தனமான காரணங்களுடனும் இ-பாஸ் கோரிக்கைகள் காவல்துறைக்கு குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில், வெளியே செல்ல விரும்பிய ஒருவரிடமிருந்து வினோதமான இ-பாஸ் கோரிக்கையை கேரள காவல்துறையினர் பெற்றனர். அதில், கண்ணூரின் கண்ணபுரத்தில் உள்ள இரினாவே எனும் பகுதியில் வசிப்பவர் தனது இ-பாஸ் விண்ணப்பத்தில் முகம் சுழிக்கும் செயலிற்கு வெளியே செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.
மேலும், மாலையில் நேரத்தில் தனது வீட்டில் இருந்து கண்ணூரில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல அந்த நபர் விரும்பியுள்ளார். இந்த விண்ணப்பத்தை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபருக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்பின், காவல் நிலையத்துக்கு, அழைத்து வரப்பட்ட நபரை கைது செய்ய வலப்பட்டணம் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. விசாரணைக்கு பின் தான் செய்ததை தவறு என்று உணர்ந்த அந்த நபர் போலீசாரிடம் மன்னிப்பு கோரினார்.
மேலும் தனது இ-பாஸ் கோரிக்கை விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்பு எழுத்துப்பிழையை ஒழுங்காக பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். விண்ணப்பத்தில் ‘சிக்ஸ் ஓ கிளாக்’ என்று எழுத விரும்பியதாகவும் அது தவறாக "சிக்ஸ்" என்று எழுதுவதற்கு பதிலாக "சி" எனும் எழுத்திற்கு பதிலாக "செ" எழுதப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட போலீசார், அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று எச்சரித்து அந்த நபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
