பாகுபலி போல் 300 கிலோ கட்டையை தோளில் சுமந்து சென்ற நபர் - இணையத்தை கலக்கும் காட்சி!
இணையத்தில் அன்றாடம் ஏதாவது ஒரு விநோதமான சம்பவங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாவது உண்டு. அப்படிப்பட்ட வீடியோக்களை நாம் பார்க்கும் போது, ஒரு நிமிடம் சற்று பயம் கூட நம் மனதில் தோன்றலாம்.
அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கேரள மாநிலம், இடுக்கி பகுதியில் ஓண தின ஸ்பெஷலாக ஒரு போட்டி நடந்துள்ளது.

அந்த வகையில், பிரதீஷ் என்ற வாலிபர் ஒருவர் சுமார் 300 கிலோ எடையுள்ள மரக்கட்டை ஒன்றை தோளில் தூக்கி உள்ளார். தூக்கியது மட்டுமின்றி, சுமார் 73 மீட்டர் தூரம் வரை நடந்து செல்லவும் செய்துள்ளார்.
இவை, ஒரு போட்டி போல இது நடத்தப்பட்ட நிலையில், சாலையை சூழ்ந்திருந்த பொது மக்கள் அனைவரும், வாலிபருடன் சேர்ந்து ஆர்ப்பரித்து அவருக்கு உற்சாகத்துடன் ஊக்கமளிக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.