மின்னல் வேகத்தில் வந்த கார் பைக் மீது மோதல்! தலைகீழாக தூக்கி வீசப்பட்ட பெண்; பதற வைக்கும் சிசிடிவி காட்சி
வேகமாக வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் ஒன்றில் மோதி பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவ சிசிடிவி காட்சி காண்போரை பதபதைக்க வைத்திருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரத்தில், உள்ள ரோட்டில் அதிகவேகமாக கார் ஒன்று தடுமாற்றத்துடன் வந்துள்ளது.
அப்போது மனைவியுடன் கருக்குப்பாறை பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் ஸ்கூட்டரில் வந்துள்ளார்.

எதிர்பாராத விதமாக கார் ஸ்கூட்டரில் மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட அவரது மனைவி கிட்டத்தட்ட 50 அடி உயரத்திற்கு சிசிடிவி காமெரா பக்கம் தூக்கி வீசப்பட்டார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்க, ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த வீடியோ வெளியாகி பலரையும் பதபதைக்க வைத்திருக்கிறது.