கோவில் திருவிழாவில் மதுபோதையில் அம்மன் பாடலுக்கு நடனமாடிய காவலர்
கோவில் திருவிழாவில் மதுபோதையில் அம்மன் பாடலுக்கு நடனமாடிய காவலரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுபோதையில் நடனமாடிய காவலர்
கேரளா மாநிலம், இடுக்கி, பூப்பற மாரியம்மன் கோவில் திருவிழாவில், பணியில் இருந்த சந்தனபாறை காவல் நிலையத்தின் கூடுதல் சப்-இன்ஸ்பெக்டரான கே.பி. ஷாஜி, தமிழ் பக்தி பாடலுக்கு திடீரென மதுபோதையில் நடனமாடினார்.
அவரை அங்கிருந்தவர்கள் அழைத்தபோதும், அவர் பிடிகொடுக்காமல் போதை தலைக்கேறி நடனமாடிக்கொண்டிருந்தார்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
வீடியோ வைரலானதையடுத்து, மூணாறு டி.எஸ்.பி மற்றும் காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டது.
இதனையடுத்து குறித்த அதிகாரி மீது கேரள காவல் துறை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.