Viral Video: நடைபாதையில் பைக் ஓட்டி வந்த நபர்! சரியான பாடம் கற்பித்த பாட்டி
மனிதர்கள் நடக்கும் நடைபாதை ஒன்றில் இருசக்கர வாகனத்தினை ஓட்டி வந்தவருக்கு பாட்டி ஒருவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இன்றைய காலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டு தான் செல்கின்றது. முந்தைய காலத்தில் சற்று வசதியானவர்கள் வீடுகளில் தான் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் காணப்படும்.
ஆனால் இன்றைய காலத்தில் வீட்டில் நான்குபேர் இருந்தாலும் அவரவர்களுக்கு தனித்தனியான வாகனம் வைத்துள்ளனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அதன் விதியையும் மீறுகின்றனர். இங்கு போக்குவரத்து மீறிய நபருக்கு பாட்டி ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
Ethirneechal: தேவ சகாயத்திடமிருந்து எஸ்கேப் ஆன ஜனனி... சக்தி கைக்கு வந்த வீடியோ! பரபரப்பான திருப்பம்
கேரளா மலப்புரத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடைபாதையில் இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்பொழுது எதிரே வந்த வயதான பாட்டி ஒருவர் குறித்த நபரை வழிமறித்து அவரை மீண்டும் சாலை வழியாக செல்ல வைத்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |