பிறந்தநாளில் உயிரிழந்த இளம்பெண்! வேலைக்கு சென்ற இடத்தில் அரங்கேறிய துயரம்
கேரளாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் திடீர் விபத்தில் சிக்கியதால், பிறந்தநாளில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாளில் உயிரிழந்த பெண்
கேரள மாநிலம் காசர்கோடு தலப்பாடி பகுதியை சார்ந்தவர் ரஞ்சன் இவரது மனைவி ஜெயஷீலா. இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், ஜெயசீலா வீட்டு அருகில் இருந்த பேக்கரி ஒன்றிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல பேக்கரியில் உள்ள கிரைண்டர் ஒன்றில் மாவு அரைத்துக் கொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இவர் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா கிரைண்டரில் சிக்கியுள்ளது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்த தலப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்த நாள் அன்றே இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.