சூடான சாதத்திற்கு சூப்பரான கேரளா மீன் கறி! இந்த படிமுறை செய்தால் போதுமாம்
பொதுவாக வீடுகளில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மீன் என்பது மிகவும் பிடித்தமான உணவாக பார்க்கப்படுகிறது.
மீன்கள் சாப்பிடுவதால் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல ஊட்டச்சத்துக்கள் எமக்கு கிடைக்கிறது.
இதனால் சிலர் வீடுகளில் மாமிசம் உணவு என்றாலே மீன் பொரியல், குழம்பு, வறுவல் என எதாவது இருக்கும். மேலும் மீன்களில் சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவை உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கேரளா ஸ்டைலில் எவ்வாறு மீன் குழம்பு செய்வது என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- அயிலை மீன் - 1 கிலோ
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- தக்காளி - 1
- இஞ்சி - 1
- பூண்டு - 7
- கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
- பச்சை மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு
- தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் -1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் சமைக்க தேவையான மீனை நன்றாக மஞ்சள் கலந்து சுத்தம் செய்யவும் பின்னர் கறிக்கு தேவையான கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம் என்பவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் புளியை கரைச்சலை தயார் செய்ய வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையானளவு எண்ணெய் விட்டு சூடாகியதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் போது தக்காளியை சேர்க்க வேண்டும். வதங்கி கலவையை ஆறிதும் ஒரு மிக்ஸி சாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து நன்றாக கழுவி எடுத்த மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் இட்டு, அது மிதமான சூட்டிக்கு வந்தவுடன், கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய நிலையில் இருக்கும் போது, அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கலவையையும் சேர்க்க வேண்டும். பச்சை வாசம் போகும் வரை வதக்கிய பின்னர், புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கொதித்து கொண்டிருக்கும் போது வெட்டி வைத்திருக்கும் மீன்களை சேர்த்து கொள்ள வேண்டும். சுமார் 10 -15 நிமிடங்கள் அப்படியே கொதிக்க விட வேண்டும், கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் கேரளா மீன் கறி தயார்!