கீழே விழச் சென்ற பயணி! நொடியில் காப்பாற்றிய நடத்துனர்! மிரள வைக்கும் காட்சி
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் கீழே விழச் சென்ற நிலையில், நடத்துனர் நொடிப்பொழுதில் காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகின்றது.
இன்று பெரும்பாலான இடங்களில் வாகன விபத்தினால் பல உயிர்கள் பலியாகி வருகின்றது. என்னதான் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டாலும், நொடிப்பொழுதில் எதிர்பாராத விபத்துக்கள் அரங்கேறி வருகின்றது.
கேரளாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் நடத்துனர் அருகில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டு பயணித்துள்ளார்.
எதிர்பாராத தருணத்தில் பேருந்தின் வாசற்படி மூலம் தவறி சாலையில் விழுவதற்கு சென்றுள்ளார். அப்பொழுது நடத்துனர் மாஸாக செயல்பட்டு அவரை காப்பாற்றியுள்ளார்.
குறித்த காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளதுடன், காப்பாற்றிய நடத்துனருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.
Kerala bus conductor with 25th Sense saves a guy from Falling Down from Bus
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 7, 2024
pic.twitter.com/HNdijketbQ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |