பலரையும் கொந்தளிக்க வைத்த செயல்! இரக்கமில்லாமல் கொல்லப்பட்ட பறவைகள்; வைரல் வீடியோ
நவீன காலக்கட்டத்தில் மனிதர்களிடம் உள்ள நற்குணம். மனிதநேயம் முற்றிலும் மறைந்து வருகிறது. தங்களின் சுயநலத்திற்காக பல விலங்கினங்களை மனிதாபிமானம் இல்லாமல் கொன்று வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ காண்போரை கண்கலங்கவும் கொந்தளிக்கவும் வைத்திருக்கிறது.
கேரளாவில், ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தை ஜெசிபி வண்டியை கொண்டு, மரத்தை வெட்டி தள்ளியுள்ளனர்.
அப்போது, மரத்தில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பல பறவைகள் இரக்கமின்றி கீழே விழுந்து இறந்தன.
பல குட்டிகள் மற்றும் கூடுகள் ஒரு நொடியில் விழுந்து இறந்தன.
இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது மட்டுமின்றி பலரையும் கோபமடைய வைத்திருக்கிறது.
இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.
Everybody need a house. How cruel we can become. Unknown location. pic.twitter.com/vV1dpM1xij
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 2, 2022