12 ஆம் வகுப்பில் தோல்வி… பட்டப்படிப்பில் கல்லூரியின் முதல் மாணவராக வந்து அசத்திய ஆட்டோ டிரைவர்!

India Kerala Auto Driver
By Nivetha Oct 19, 2021 10:45 AM GMT
Report

கேரள மாநிலம் - திருச்சூரில் 10ம், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத ஒரு மனிதர் பட்டப்படிப்பில் கல்லூரியின் முதல் மாணவராக மாறிய அதிசயம் நடந்துள்ளது.

திருச்சூரைச் சேர்ந்தர் ஆட்டோ ஓட்டுநர் அபிலாஷ் என்பவர் தான் இந்த ஆச்சரிய நிகழ்வை ஏற்படுத்திக் காட்டியிருக்கிறார்.

இவர் கல்லூரி விண்ணப்பம் வாங்கியதே சற்று வித்தியாசமான சூழ்நிலையில் தான்.

இவரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் தன் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கேரளா வர்மா கல்லூரியில் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கிக்கொண்டு வருமாறு அபிலாஷிடம் கூறியிருக்கிறார்.

12 ஆம் வகுப்பில் தோல்வி… பட்டப்படிப்பில் கல்லூரியின் முதல் மாணவராக வந்து அசத்திய ஆட்டோ டிரைவர்! | Kerala Auto Driver Inspiration Story College

அதன்படி, அபிலாஷும் விண்ணப்பம் வாங்கிக் கொடுத்துள்ளார். விண்ணப்பம் வாங்கிய பின்புதான் பக்கத்து வீட்டுக்காரர் மகள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த விண்ணப்பம் தான் அபிலாஷ் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

பக்கத்து வீட்டுக்காரர் முதலில் இந்த விண்ணப்பத்தை தனது மகளுக்கு உதவாது என்பதை உணர்ந்து அதை வேறு யாரவது கல்லூரியில் படிக்க விருப்பமிருந்தால் அவர்களுக்கு கொடுத்துவிடு என்று அபிலாஷிடம் கூறியிருக்கிறார்.

விண்ணப்பத்தை வாங்கிக்கொண்ட அபிலாஷ், விளையாட்டுத் தனமாக அதை தான் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். 12ம் வகுப்பு தேர்ச்சிபெறாதவர் எப்படி கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும் என்கிறீர்களா? பள்ளியில் நேரடியாகச் சென்றதில் தான் அபிலாஷ் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற முடியாமல் இருந்தார்.

எனினும் கேரளாவில் இருக்கும் திறந்தவெளி பள்ளிக்கூடத்தின் வாயிலாக 12ம் வகுப்பு முடித்து இருந்திருக்கிறார்.

இது அவருக்கு கைகொடுக்க, கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்க, கல்லூரியிலும் அவருக்கு சீட் கிடைத்துள்ளது.

பிஏ தத்துவ படிப்பில் சேர்ந்தவர், அதில் 88 சதவீத மதிப்பெண்களை எடுத்து ஊர் மக்களை அசத்தியுள்ளார். கல்லூரியில் டாப்பாராக வந்ததுக்கு பேராசிரியர் சங்கரன் நம்பியார் விருது மற்றும் ஷியாம் மெமோரியல் டாப்பர் என்டோவ்மென்ட் பட்டத்தையும் அபிலாஷ் வென்று அசத்தி இருக்கிறார்.

பிஏ-வோடு நின்று விடாமல், பிஎட் படிப்பையும் படித்த அபிலாஷ், அதில் 100 சதவீத வருகையோடு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பகலில் கல்லூரிக்குச் செல்வது, இரவில் ஆட்டோ ஓட்டுவது என செயல்பட்டு சாதனை படைத்திருக்கிறார்.

பிஎட் முடித்த பின்பு ஆசிரியராக பணியில் சேர்ந்திருக்கிறார். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் மூட தற்போது முழுநேரமாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

32 வயதான அபிலாஷ் தனது வாழ்க்கையில் பல தொழில்களில், பல ரோல்களில் இருந்துள்ளார் எனலாம்.

10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பின்னர், கட்டுமானப் பணிகளுக்குச் சென்றார்.

அவர் பிளஸ் டூவிலும் தோல்வியுற்ற பின் போர்ட்டர் ஆனார். எனினும் அவர் தனது 22 வயதில் ஓபன் ஸ்கூல் திட்டத்தின் மூலம் பிளஸ் டூவை முடித்தார்.

பின்னர், அபிலாஷ் ஐ.டி.சி.யில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா முடித்தார். அவருக்கு வேறு வருமானம் இல்லாததால், அவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆனார். இது தவிர, அவர் ஒரு நாட்டுப்புற பாடகரும்கூட.

நாட்டுப்புற பாட்டு, இசை கருவி, பூசாரி, கால் பந்து விளையாட்டு, பேருந்து கிளீனிங், இரவு பாடசாலை மற்றும் கிரேன் ஆபரேட்டர் போன்ற பல தொழில்களையும் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.

திரிச்சூர் நடதாராவைச் சேர்ந்த மறைந்த கரப்பன் மற்றும் வள்ளியம்மா ஆகியோரின் மகன் இந்த அபிலாஷ். அபிலாஷ் பட்டபடிப்பு படிக்கும் போது அவரின் தந்தை காலமானார்.

தற்போது, ​​திருச்சூரில் உள்ள சியாரத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பகுதி நேர பாடமாக பி.ஜி.டி.சி.ஏ படித்து வருகிறார் அபிலாஷ்.

  

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US