உடலை வலுவூட்டும் கேப்பைக் களி! இவ்வளவு நன்மைகளா
பொதுவாக பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. இந்த உணவு தற்போது இருப்பவர்களுக்கு புதிதாக இருக்கலாம்.
ஆனால் பஞ்சம், சிறைச்சாலை என உணவுக்கு தட்டுபாடான காலங்களில் இந்த களி தான் பலரின் வயிற்றிற்கு கைக் கொடுத்துள்ளது.
களியில் சேர்க்கப்பட்டும் பொருட்களுக்கேற்ப களியின் வகைகளும் வேறுபடுகின்றது.
அந்த வகையில், ராகி களி, கேழ்வரகுக் களி, கேப்பைக் களி என பலவகைப்பட்ட களிகள் இருக்கின்றன.
இதன்படி, கேப்பை களி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
கொதிநீர் ஆற ஆற ராகியை களி போன்று உருண்டையாக பிடித்து இறக்கவும்.
களியை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. கேழ்வரகு களி சாப்பிட்டால் பசி வருவது குறைவாக இருக்கும்.
2. உடல் வெப்பத்தை குறைக்க முடியாமல் தடுமாறும் பெண்கள் களி சிறந்ததாக இருக்கும். இது ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
3. சர்க்கரை நோயாளிகளுக்கு ராகி மிகவும் நல்லது.
4. ராகி களியில் இருக்கும் கால்சியம், எலும்பு மற்றும் பற்களை வலுவாக்கும்.
5. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க கேப்பைக் களி உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |