பாடகி கெனிஷா பிரான்சிஸா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் காணொளி
பாடகி கெனிஷா பிரான்சிஸ் தற்போது வெளியிட்டுள்ள "அன்றும் இன்றும்" என தலைப்பிடப்பட்ட ஆல்பம் பாடலின் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
கெனிஷா ஃபிரான்சிஸ்
தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது தான் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.
கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து பெறவுள்ளதாக அறிக்கை வெளியிட்ட ரவி மோகன், அடுத்தடுத்த அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.
அவர் ஒரு பக்கம் இருக்க ஆர்த்தி ரவியும் தன் பக்கத்திற்கு அறிக்கையை வெளியிட்டு வந்தார். இவர்கள் இந்த பிரச்சனை முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பினர்.
இந்நிலையில் பாடகி கெனிஷா பிரான்சிஸின் தற்போது வெளியிட்டுள்ள "அன்றும் இன்றும்" என தலைப்பிடப்பட்ட ஆல்பம் பாடலின் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த காணொளியின் இறுதியில் நடிகர் ரவி மோகனும் சிறப்பு தோற்றத்தில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |